உக்ரைன் கெர்சன் நகரை விட்டு வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கெர்சன் நகர சாலையில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் திரண்ட மக்கள் மீது ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியில் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் நிலை குழைந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.