மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக ஏவும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியுபோல் நகரத்தை நோக்கி நொடிக்கு ஒரு முறை இந்த குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தரையில் இருந்த புற்களும் பற்றி எரிந்தன.
ஆவியாக்கும் குண்டுகள் மற்ற குண்டுகளை விட ஆபத்தானவை என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தக் குண்டுகள் வெடிக்கும் போது, ஒரு பெரிய தீப்பந்தத்தை உருவாக்க சுற்றியுள்ள பகுதியில் ஆக்ஸிஜனை உறிஞ்சுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் மனிதர்கள் ஆவியாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.