Petrol and Diesel Price: ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, ரூ.102.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.19 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு!
தமிழ்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிற மாநில உரிமைகளில் தலையிடுவதா? கர்நாடக முதல்வர் சாடல்!
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை தொடரும். மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்டவிரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக சாடியுள்ளார்.
“ “
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.1,000த்தில் இருந்து ரூ.3000 ஆகவும், கடும் ஊனத்திற்கு உதவித்தொகை ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்கவும் கோரிக்கை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹிஜாப் அணிந்து சென்ற 40 மாணவிகளுக்கு, தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற உத்தரவுப்படி இந்த முடிவை எடுத்ததாக, கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களில், டீசல் மொத்த கொள்முதலை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறுத்தியது.
ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதை கண்டித்து, அமெரிக்காவுடனான தூதரக உறவை முறிப்போம் என்று ரஷ்யா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று கலக்கத்தில் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்றும் ஆஜராகிறார்.
கடந்த ஆண்டில் பெய்த மழையால் அரகண்டநல்லூர் சிறுபாலம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதனை சீரமைக்கும் பணிக்காக, விழுப்புரம் – திருக்கோயிலூர் சாலையில் 3 மாத காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.