கிவ்
உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது. குறித்து ரஷ்ய அதிபரைச் சந்திக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வலியுறுத்தி உள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் போர் வீரர்கள் தவிர உக்ரைன் நாட்டின் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து அடியோடு நின்று போனது.
இந்த போரை நிறுத்த பல கட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகள் நட்ந்தன. இவற்றில் இரு நாடுக்ளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். ஆயினும் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் காணப்படவில்லை. போர் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, “இந்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் அவரை நேரடியாகச் சந்தித்து இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.