இந்துக் கோயில் கட்ட நிலத்தைத் தானம் செய்த இஸ்லாமிய குடும்பம்;துளிர்க்கும் சகோதரத்துவம்!

நாட்டின் சகோதரதத்துவமும் மனிதநேயமும் மத இன வேறுபாடுகளைக் கடந்து இதுபோலான சம்பவத்தின் வழியாக வெளிச்சத்திற்கு வரும்போது நாம் இந்தியாவின் இறையாண்மையை உணர்கிறோம். பீகாரில் உலகிலேயே மிகப்பெரிதாகக் கட்டப்படும் Virat Ramayan Mandir கோயிலுக்கு ஒரு முஸ்லீம் குடும்பம் ரூபாய் 2.5 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பீகார் Kaithwalia பகுதியில் கட்டப்படும் சிவாலயத்தின் பொறுப்பை ஏற்றிருக்கிற மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஆச்சாரியா கிஷோர் குனால், பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, “இஸ்லாமியர்களின் ஆதரவு இல்லையெனில் இந்தக் கனவு திட்டம் நிறைவேற்ற மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கும். கெளகாத்தியைச் சேர்ந்த தொழிலதிபர் இஸ்தியாக் அகமத் கான் (Ishtiyaq Ahmad Khan) மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளனர். தற்போது தான் கோயிலின் பெயருக்கு மாற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை முடித்துக் கொடுத்தனர்” என்கிறார். ஆச்சாரியா முன்னாள் காவல் துறை அதிகாரி. “சமூக நல்லிணக்கத்துக்கும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்துக்கும் இது சிறந்த எடுத்துக்காட்டு” என்கிறார்.

அங்கோர் வாட்

அறக்கட்டளையிடம் ஏற்கனவே 125 ஏக்கர் மதிப்பிலான நிலம் கட்டிடப் பணிகளுக்காக கைவசம் உள்ளது. இன்னும் 25 ஏக்கர் பெரும் முயற்சியில் உள்ளனர். ரூபாய் 500 கோடி மதிப்பில் உருவாகும் இந்தக் கோயிலுக்கு, விரைவில் புது டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்த குழுவிடம் அட்வைஸ் பெற உள்ளனர். இந்தக் கோயில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் புத்த ஆலயத்தைவிட பெரிதாக கட்டப்பட இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.