தடுப்பூசி கட்டாயம்: உச்ச நீதிமன்றத்தில் 1939 சட்டத்தை மேற்கோள்காட்டிய தமிழக அரசு

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களில் மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் 1939 ஆம் ஆண்டு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கோள் காட்டியது.

பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ஜாகோப் புலியேல் உச்சநீதிமனஅறத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு அதிகம் கொரோனா பரவிவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து 29 சிலைகள் மீட்பு; திருஞானசம்பந்தர் சிலை உட்பட 4 தமிழகத்தைச் சேர்ந்தவை

தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கலாம் என்று தமிழக அரசின் 1939ஆம் ஆண்டு சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 76 (2) (b) பிரிவில் அம்சம் உள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.