2020 மேஜிக் 2021ல் வொர்க் அவுட் ஆகவில்லை.. அழுது புலம்பும் #FMCG நிறுவனங்கள்..!

இந்திய நுகர்வோர் சந்தையில் இருக்கும் சோப், டூத்பேஸ்ட், ரெடிமேட் உணவுகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட 20 பிரிவுகளின் வர்த்தகம் 2020 அதாவது லாக்டவுன் காலத்தில் இருந்த வளர்ச்சியை 2021ஆம் ஆண்டில் பெற முடியாமல் தவித்து வருகிறது FMCG நிறுவனங்கள்.

பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன?

ஏற்கனவே பல்வேறு மூலப்பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் பல முறை விலையை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது, இது நுகர்வோர் சந்தையை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே இன்று எப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன்

2020 லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே முடங்கியிருந்தனர். இதனால் நுகர்வோர் பொருட்களின் நுகர்வு அனைத்து பிரிவுகளிலும் அதிகரித்தது. குறிப்பாகச் சோ போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கப்படும் பொருட்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்தது.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஹோம், பர்சனல் மற்றும் உணவு போன்ற பிரிவுகளில் இருக்கும் பொருட்களின் விற்பனை வளர்ச்சி 2020ல் 20 சதவீதமாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் இந்த 14 பிரிவு வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் மக்கள் மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நுகர்வு அளவீட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

சோப் விற்பனை
 

சோப் விற்பனை

இதில் முக்கியமாகக் கொரோனா தொற்று நிறைந்த காலகட்டத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் அதிகளவில் கைகளைக் கழுவும் காரணத்தால் சோப் விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020ல் சுமார் 13.5 சதவீதம் உயர்ந்தது. அனால் 2021ஆம் ஆண்டில் வெறும் 5.8 சதவீதம் இதுகிட்டதட்ட 2019 அளவீடாகும்.

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

மேலும் தரையைச் சுத்தம் செய்யும் க்ளீனர் விற்பனை 2020ல் 61 சதவீதமாக இருந்தது, 2021ல் வெறும் 4 சதவீதமாக உள்ளது. பால் பொருட்கள் விற்பனை 18.3 சதவீத வளர்ச்சியில் இருந்து 2021ல் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு முந்தை காலகட்ட அளவீடு அல்லது அதற்கும் குறைவான அளவீட்டைப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம் விலைவாசி தான்.

ஜெப்ரீஸ் நிறுவனம்

ஜெப்ரீஸ் நிறுவனம்

இன்று ஜெப்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட நுகர்வோர் நிறுவன விலை பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் டார்கெட் விலை பெரிய அளவில் குறைத்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2900 இருந்து 2520 ரூபாய், ஐடிசி விலையில் மாற்றம் இல்லாமல் 305 ரூபாயாக அறிவித்துள்ளது. மேலும் காட்ரிஜ் 1190ல் இருந்து 970 ரூபாய், பிரிட்டானியா 18600ல் இருந்து 17200 ஆக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FMCG companies sales falls back to pre pandemic level; Lost 2020 magic as covid cases reduce

FMCG companies sales falls back to pre pandemic level; Lost 2020 magic as covid cases reduce 2020 மேஜிக் 2021ல் வொர்க் அவுட் ஆகவில்லை.. அழுது புலம்பும் #FMCG நிறுவனங்கள்..!

Story first published: Tuesday, March 22, 2022, 12:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.