நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் அரியும் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ளது.
நாது முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவும் நீட் தேர்வால் கனவாகவே போய்விடுகிறது என நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒரு பக்கம் போராடி வருகின்றனர்.
இதற்கிடையே, கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேர் எழுதுகின்றனர் ? இதில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுகின்றனர் ? என்று தகவல் அரியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த விவரங்கள் வெளியிட்டால் மேலும் சர்ச்சைகள் உண்டாக வாய்ப்பு இருப்பதால் அதனை வெளியிட தேசிய தேர்வு முகமை மறுக்கிறது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா உருமாற்றம் அடைகிறது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்