இது வேற லெவல் கணிப்பு.. வேதாந்தா 20% லாபம் தரலாம்.. நல்ல சான்ஸ்..!

வேதாந்தா இந்தியாவில் சுரங்கத்துறை மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.

இன்றைய பங்கு சந்தை அமர்வில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த பங்குகளில் வேதாந்தாவும் ஒன்று.

ஏனெனில் இப்பங்கின் விலையானது இன்றைய அமர்வில் அதன் 52 வார உச்சத்தினை எட்டியது.

உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்!

வாங்கலாம்?

வாங்கலாம்?

அமெரிக்காவின் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று லார்ஜ் கேப் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் பங்கு மதிப்பினை நியூட்ரல் (Neutral) என்ற நிலையில் இருந்து, வாங்கலாம் (BUY) என்று பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டும் அல்ல இப்பங்கின் இலக்கு விலையையும் உயர்த்தியுள்ளது இந்த நிறுவனம்.

எவ்வளவு இலக்கு?

எவ்வளவு இலக்கு?

முன்னதாக இந்த பங்கின் இலக்கு விலையை 365 ரூபாயாக நிர்ணயித்து இருந்த நிலையில், தற்போது அதனை 485 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் இலக்கினை மேற்கோண்டு 20% அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 400.05 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று 404.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்றைய நிலவரம் என்ன?
 

இன்றைய நிலவரம் என்ன?

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இயில் 1% அதிகரித்து, 404.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 416 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 402 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1% அதிகரித்து, 404 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 415.95 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 402.10 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்ச விலை 415.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 209.80 ரூபாயாகும். இது கடந்த ஏப்ரல் 12, 2021 அன்று தொட்டது.

 ஓராண்டு நிலவரம்

ஓராண்டு நிலவரம்

இப்பங்கின் விலை கடந்த 4 அமர்வில் மட்டும் 13.63% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஓராண்டில் 81.23% அதிகரித்தும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 18.78%மும் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் மொத்தமாக 9.90 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு 40.61 கோடி ரூபாயாகும்.

அவுட்லுக் எப்படி?

அவுட்லுக் எப்படி?

இதன் சந்தை மதிப்பானது பி.எஸ்.இ-யில் 1.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இப்பங்கின் அவுட்லுக் ஆனது மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் செயல்பாட்டு மூலதன செலவினங்கள் கணிசமான உயர்வினை எட்டியுள்ளன. இதற்கிடையில் 2023 – 24ம் நிதியாண்டிற்கான வருவாய் விகிதமானது 28 – 32% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் சூசியின் கணிப்பு

கிரெடிட் சூசியின் கணிப்பு

சுவிட்சர்லாந்தினை சேர்ந்த மற்றொரு ஆய்வு நிறுவனமான கிரெடிட் சூசி நிறுவனம் இதன் இலக்கு விலையினை 420 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது நினைவு கூறத்தக்கது. மொத்தத்தில் இதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இது வருவாய் வளர்ச்சியும் எதிர்காலத்தில் உச்சம் தொடலாம் என எதிபார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

vedanta stocks may rise 20% in future: Today stcok hits 52 week high

vedanta stocks may rise 20% in future: Today stcok hits 52 week high/இது வேற லெவல் கணிப்பு.. வேதாந்தா 20% லாபம் தரலாம்.. நல்ல சான்ஸ்..!

Story first published: Tuesday, March 22, 2022, 16:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.