ராம்சரணின் மனிதாபிமானம் பற்றி புகழும் உக்ரைன் போர் வீரர்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தநிலையில் உக்ரைன் போர் வீரர் ஒருவர் ராம்சரணின் பெருந்தன்மை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் வீடியோவில் வைரலாகி வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சில காட்சிகள் உக்ரைன் நாட்டில் படமாக்கப்பட்டன. சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது கூட, உக்ரைன் நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் அந்த ஊரைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் தங்களது படப்பிடிப்பில் பணி புரிந்தனர் என்றும் அவர்கள் அனைவரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அவ்வப்போது விசாரித்து வருகிறோம் என்றும் கூறியிருந்தார்.

அதே படப்பிடிப்பில் ராம்சரணுக்கு பாடிகார்டாக பணியாற்றியவர் ரஸ்டி என்பவர். இவர் தற்போது உக்ரைன் போர் துவங்கியதால் ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு போர் வீரராக தனது கடமையை செய்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் ராம்சரணின் பாடிகார்டாக பணியாற்றியதாகவும் தான் போரில் இணைந்தது குறித்து கேள்விப்பட்ட ராம்சரண், தனது நலன் மற்றும் குடும்பம் குறித்து விசாரித்ததாகவும் பொருளாதார ரீதியாக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டு ராம்சரனின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஸ்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.