சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

நேற்று, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஜெட் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் விழுந்து சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கூறியது. 

எனினும் விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, அது செங்குத்தாக விழாது என்றும், அதற்கு மிதக்கும் திறன் உண்டு எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!

நேற்று, 133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்தது. விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் விமானம் விபத்துக்குள்ளான மலைப் பகுதியில் பெரும் தீயை ஏற்படுத்தியது.

குவாங்சூவிலிருந்து குன்மிங்கிற்கு சென்று கொண்டிருந்த MU5736 என்ற விமானம், மதியம் 13.11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் மாலை 15.05 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாதால், விமானம் விழுந்து நொறுங்கிய  மலை ப்பகுதியில் தீயை மூண்டுள்ளதாகவும், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | இவையே மிகவும் மலிவான 5 அட்வென்ச்சர் பைக்குகள் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.