இதயம், சிறுநீரகத்தில் பிரச்சினை- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்தததை அடுத்து ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (ஆர்ஐஎம்எஸ்) இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தின் ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிப்பு சிபிஐ நீதிமன்றத்தால் டோராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை சட்ட விரோதமாக திரும்பப் பெற்றதற்காக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 11ம் தேதி அன்று, கால்நடைத் தீவன ஊழல் வழக்கு தொடர்பாக லாலுவின் ஜாமின் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையின் இயக்குனர் காமேஸ்வர் பிரசாத் கூறியதாவது:-

லாலு பிரசாத் யாதவுக்கு இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர் மேற்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். லாலுவின் ஜாமின் மனு மீதான விசாரணை தேதி குறித்து சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பிரதமர் மோடியை வீழ்த்த புதிய அணி: தேர்தல் வியூகம் வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு ரூ.300 கோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.