என் அப்பா அனுபவித்த கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: தனுஷ்

நடிகர்
தனுஷ்
தன் அயராத உழைப்பால் இன்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் அறிமுகமான காலகட்டத்தில் இவரை விமர்சிக்காத ஆளே கிடையாது. இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாது தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பலனைத்தான் தனுஷ் தற்போது அனுபவித்து வருகின்றார். இரண்டு தேசிய விருதுக்கு சொந்தக்காரரான தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது முதல் படத்தின் அனுபாவங்களைப்பற்றி பேசியுள்ளார்.

சிம்பு பெரிய ஆளுதான்பா..வெளியான தகவலால் உறைந்துபோன ரசிகர்கள்..!

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தனுஷை நடிகராக்க வேண்டுமென அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா நினைத்தார். முதலில் தனுஷ் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடிக்க சம்மதித்தார்.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தந்தையின் சொல்பேச்சை கேட்டு நடிக்க சென்ற தனுஷிற்கு ஆரம்பத்தில் நடிப்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. எப்பொழுது படப்பிடிப்பு முடியும் வீட்டிற்கு செல்லலாம் என்றுதான் தனுஷ் நினைப்பாராம்.

கஸ்தூரி ராஜா

ஆனால் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பட்ட கஷ்டங்களை பார்த்து தன் அப்பாவிற்காகவே நடிகராகவேண்டும் என சபதமெடுத்தார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை
படத்தை எடுக்க போதிய பணம் இல்லாததால் கஸ்தூரி ராஜா மிகவும் சிரமப்பட்டாராம்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு காலை 4 மணிக்கே எழுந்து பணத்திற்காக பல இடங்களுக்கு சென்று பணத்தை புரட்டுவாராம். ஒருவேளை அன்று பணம் புரட்ட தாமதமானால் அன்று படப்பிடிப்பு பாதிக்கப்படுமாம்.

மேலும் பணத்தை பெற தானே காரை எடுத்துக்கொண்டு சென்று பணத்தை வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு எடுத்துவருவாராம். ஒருபக்கம் கதையில் கவனம் செலுத்துவது, மறுபக்கம் பணத்தை புரட்டுவது என கஸ்தூரி ராஜா பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை என தனுஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் கஸ்தூரி ராஜா பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று பலன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.