தமிழக பட்ஜெட்டை கண்டித்து வரும் 25-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை

இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே உன்னதமான தமிழ்நாடு கண்முன்னே உருவாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தின் கடன் 6.5 லட்சம் கோடியாக உயர இருப்பதை உன்னதமாகப் பார்க்கிறாரா? கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, குடும்ப பெண்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத்தொகை, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டமில்லாத பட்ஜெட் என்பதால் உன்னதமாகப் பார்க்கிறாரா?

பட்ஜெட்டில் கொண்டு வராததை உன்னதமாக பார்க்கிறாரா? ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கை கழுவி இருக்கிறாரே. டாஸ்மாக் கடைகள் நடத்துவதன் மூலம் மக்களை குடிக்க வைத்து அவர்கள் குடும்பத்தை சீரழித்து ஆண்டுக்கு 36,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கிடைக்க செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வருவாய் என்பது தமிழகத்திற்கே கிடையாது என்ற நிதியமைச்சர் இப்போது 23000 கோடி வருவாய் வந்துள்ளதை குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்று தெரிவித்து தாக்கல் செய்து இருக்கிறீர்கள். சூரிய ஒளி பம்ப், விவசாய உபகரணங்கள் இப்படித் தனித்தனியே ஏதோ புதிதாக உதவிகள் செய்வது போல் ஏற்கனவே மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் அதே மத்திய அரசின் திட்டத்தை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

எனவே மக்களை திசை திரும்பும், ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து மார்ச் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது.

அறிவிப்புகளில் ஆட்சி நடத்தும் அறிவாலயம் திமுக ஆட்சியை கண்டித்து, அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சிப் பாதையில் தமிழகத்தை தவறாக வழிநடத்தும் திமுக ஆட்சியை கண்டித்து முழக்கமிட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் னெ கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்..
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை – ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.