“உங்கள் அறிக்கையை கேட்கவில்லை” – ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு மம்தா காட்டமான பதில்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தீவைப்பு சம்பவத்தில் 8 பேர் பலியானது குறித்து ஆளுநர் ஜக்தீப் தங்கர் வெளியிட்ட வீடியோவிற்கு “உங்கள் அறிக்கையை கேட்கவில்லை” என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமான பதிலை அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில், இன்று காலை வங்காளத்தின் பிர்பூமில் கிட்டத்தட்ட ஒரு டஜன் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. எட்டு பேர் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக அம்மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இச்சம்பத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாநில ஆளுநர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Horrifying violence and arson orgy #Rampurhat #Birbhum indicates state is in grip of violence culture and lawlessness. Already eight lives lost.

Have sought urgent update on the incident from Chief Secretary.

My thoughts are with the families of the bereaved. pic.twitter.com/vtI6tRJcBX
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 22, 2022

“திகிலூட்டும் வன்முறை மற்றும் தீவைக்கும் களியாட்டம் நிகழ்ந்துவிட்டது. ஏற்கனவே எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுகிறது. வன்முறை-கலாச்சாரம் மற்றும் சட்டமின்மைக்கு ஒத்ததாக அரசு இருப்பதை அனுமதிக்க முடியாது என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். இந்த சம்பவம் குறித்து எனக்கு அவசர தகவல் அனுப்புமாறு தலைமை செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்று தன்கர் தான் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.
Jagdeep Dhankhar criticises Mamata Banerjee for comment on attack on BJP  convoy
இதற்கு பதிலளித்து கடிதம் ஒன்றை எழுதிள்ளார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இந்த சம்பவம் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சம்பவம் குறித்து “அதிகமான” அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் அறிக்கையை யாரும் கேட்கவில்லை என்று பொருள்படும் வகையில் ““sweeping and uncalled for” என்று குறிப்பிட்டுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் இச்சம்பவம் குறித்து 72 மணி நேரத்தில் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.