ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை| Dinamalar

மாஸ்கோ:ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடும் போட்டியாக உருவெடுத்தார்.

இவரை காபியில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் தேறிய இவர் ஒரு வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நவால்னிக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்துள்ளார். ‘பொய் வழக்குகள் வாயிலாக என்னை சிறையிலேயே முடக்கிப் போட புடின் முயற்சிக்கிறார்’ என நவால்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.