#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் விவகாரம் – கீவ் புறநகர் பகுதியில் கடும் சண்டை: ரஷிய படைகள் விரட்டி அடிப்பு

 23-03-2022

04.10: உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
3.30:உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பால் உக்ரைன் மக்கள் 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 10,000 ஆயிரம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, கிரம்ளின் சார்பு செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.
12.10: ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஐ.நா.பொதுச் செயலாளர்  ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் இடைவிடாது குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த போர் மூலம் துன்பம், அழிவு மட்டும் ஏற்படும் என்றும் போரினால் எதையும் வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.

         22-03-2022
20.20: ரஷியா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷிய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என செர்பிய உள்துறை மந்திரி அலெக்சாண்டர் வுலின் தெரிவித்துள்ளார்.

18.00: உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.