தமிழகத்தில் 19 லட்சத்து 71 ஆயிரத்து 807 பேருக்கு, “ஒரு நபர்” குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ரேசன் கார்டுகள் வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் எனவும், கைரேகை சரியாக பதிவாகாவிட்டால், Proxy எனப்படும் மாற்றுப்பிரதிநிதி முறையில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு தனியாக OAP ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது எனவும், கைரேகை சரிபார்க்கும் முறையில் தங்குதடையின்றி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.