இஸ்லாமாபாத்,:சீனா – பாகிஸ்தான்இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி அழைப்பு விடுத்திருந்தார்.
இதையேற்று மாநாட்டில் வாங் யி பங்கேற்றுள்ளார்.இந்நிலையில் இஸ்லாமாபாதில் பாக். சீன வெளியுறவு அமைச்சர்கள் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன்பின் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் ‘சீன – பாகிஸ்தான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,:சீனா – பாகிஸ்தான்இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.