பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான நெருக்கடியை தணிக்க, போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி , போரிஸ் ஜான்சனிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சட்டம், அனைத்து நாடுகள் இடையிலான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில், இந்தியாவின் நம்பிக்கை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தைத் தவிர, இந்தியா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு நலன்கள், வர்த்தகம், முதலீடு குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் விவாதித்துள்ளனர்.
இதையும் படிக்க: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பிரச்சார திரைப்படம்’ : ரா அமைப்பின் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM