பஞ்சாயத்து துணை தலைவர் கொலை எதிரொலி 10 பேர் எரித்து கொல்லப்பட்ட பயங்கரம்: மேற்கு வங்கத்தில் பதற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரை வெட்டிக்கொன்றதால் ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹத்துக்கு உட்பட்ட பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பகதூ ஷேக் இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.  பகதூ ஷேக் கொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், போக்டுய் கிராமத்தில் உள்ள சுமார் 8 வீடுகளுக்கு கும்பல் தீ வைத்ததாக கூறப்படுகின்றது.  இதில் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. மளமளவென தீ பரவிய நிலையில் வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினார்கள். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். எரிந்து நாசமான ஒரே வீட்டில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ேபாலீஸ் டிஜிபி மனோஜ் மாலவியா கூறுகையில், ‘‘வீடுகளில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். பஞ்சாயத்து துணை தலைவர் கொாலைக்கும் வீடுகள் தீப்பற்றியதற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கூடுதல் இயக்குனர் ஜெனரல் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதனிடையே 8 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 72 மணி நேரத்தில் அறிக்கை உள்துறை அமைச்சகம் உத்தரவுஇந்த விவகாரத்தின் மூலம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மாநில பாஜ தலைவர் மனோஜ் திக்கா கூறுகையில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இதுபோன்ற முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். சட்டமீறல்கள் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு வித்திடுகின்றன’’ என்றார். இந்த விவகாரம் மாநில அரசு 72 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.