சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
மதுரையில் 100 டிகிரி
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, மதுரையில் மட்டும் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.