Petrol and Diesel Price: ரஷ்யா- உக்ரைன் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மீண்டும் 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ. 102.91 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெ. மரணம்.. சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது!
ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டது. குறுக்கு விசாரணை நிறைவு பெறும் பட்சத்தில், அடுத்த கட்டமாக அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெறும் என ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News LIVE Updates:
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.நகர் துணை ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் குமரி எஸ்.பி ஆகவும், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுனா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி ஆகவும், போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி ஆகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
காற்றுமாசு.. டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள்!
உலகில் காற்றுமாசு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IQAirஎன்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் என டாப் 15 பட்டியலில், 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
“ “
சென்னை பல்கலை. கீழ் இயங்கும், 131 கல்லூரிகளில், இளங்கலை பட்டப்படிப்பில் தலா, ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்டி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். குரூப் 2-இல் 116 பதவிகள், குரூப் 2ஏ-வில் 5413 பதவிகள் என மொத்தம 5529 பணிகளுக்கான தேர்வு மே-21ஆம் தேதி நடைபெறுகிறது.
3 கிராண்ட்ஸ்டாம் பட்டங்களை வென்றவரும், உலகின் நம்பர் 1 டென்னில் வீராங்கனையுமான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை ஆஷ்லே பார்டி டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே, போயிக்கூடா பகுதியில் மரப்பொருட்கள் குடோனில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல் நலைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்!
டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக, மின்னஞ்சலில் வந்த மிரட்டலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின்’ அவரசரகால சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது.
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 இந்திய மீனவர்கள், கடற்படையின் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.