ரூ.1 லட்சம் முதலீடு.. 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.. வீடு கட்ட போதுமானதா?

எல்லோருக்குமே வாழ்க்கையில் மிகப்பெரிய கனவுகள், இலட்சியங்கள் இருக்கும். ஆனால் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் வீடு. இருப்பவர்கள் இன்னும் பெரிய வீட்டை கட்ட வேண்டும். இல்லாதவர்கள் சிறிய அளவில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும். இப்படி பல்வேறு ஆசைகள் இருக்கும்.

ஏன் பலருக்கும் இது அவர்கள் வாழ்வில் இலட்சியமாக கூட இருக்கலாம். அந்த வகையில் குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர் எனது வயது 25. பெயர் நித்தீஷ். நான் தற்போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய தயாராக உள்ளேன். 30 ஆண்டுகள் கழித்து எனக்கு வீடு கட்ட போதுமானதாக இருக்குமா? இன்னும் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். நான் எஸ்ஐபியில் முதலீடு செய்யலாமா? எதில் முதலீடு செய்யலாம் என கேட்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்.. ஆடைகள் நிறுவனத்தில் ரூ.950 கோடி முதலீடு..!

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்?

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்?

பொதுவாக நீண்டகால நோக்கில் எனும் போது நிதி ஆலோசகர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளையே பரிந்துரை செய்கின்றனர்.

நித்தீஷ் கூறியது போல மியூச்சுவல் ஃபண்டில் 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரின் வருமானம் தோராயமாக 12% என வைத்துக் கொள்வோம். 30 ஆண்டுகள் வைத்துள்ளார் என கணக்கிட்டால் அவரின் வட்டி வருமானம் 28,95,992 ரூபாயாகும். அவரின் மொத்த கார்ப்பஸ் மதிப்பு 29,95,992 ரூபாயாக இருக்கும்.

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்?

ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்?

இதே ஒரு வேளை 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், 10% வருமானம் என எடுத்துக் கொண்டால் கூட அவரின் கார்ப்பஸ் 1.75 கோடி ரூபாயாக இருக்கும். முதலீடு காலம் 30 ஆண்டுகள். இதே 20 ஆண்டுகள் முதலீட்டு காலம் என வைத்துக் கொண்டால் அவரின் கார்ப்பஸ் இலக்கு 67 லட்சம் ரூபாயாக இருக்கும்.

SIPயில் முதலீடு?
 

SIPயில் முதலீடு?

SIPயில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக எடுத்துக் கொள்வோம். இந்த முதலீட்டினை தொடர்ந்து 30 ஆண்டுகள் செய்கிறீர்கள் என கொண்டால், 12% வருமானமாக கொண்டால் கூட, அவரின் கார்ப்பஸ் இலக்கு என்பது 35,29,914 ரூபாயாக இருக்கும்.

இதே காலகட்டத்தில் 2000 ரூபாய் முதலீடு செய்தால் அவரின் கார்ப்பஸ் இலக்கு 70 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதனையும் கணக்கில் கொள்ளுங்க

இதனையும் கணக்கில் கொள்ளுங்க

ஆக வருடத்திற்கு வருடம் உங்களது வருமானத்திற்கு ஏற்ப எஸ்ஐபி முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் அடையும் கார்ப்பஸ் இலக்கும் அதிகமாக இருக்கும். அதனுடன் நிலையான வருமானம் தரக்கூடிய அஞ்சலகத்தின் பிபிஎஃப், என்பிஎஸ் அல்லது சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களிலும் போட்டு வைக்கலாம். இது குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.

 சரியான பாதை

சரியான பாதை

இவற்றுடன் ஹெல் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். இது உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் அவசர காலகட்டத்தில் பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பெரும் செலவுகளை தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும். ஆக இதன் முலம் உங்களது பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்கும். இதுவே உங்களது இலக்கினை அடைய மிக சரியான பாதையாகவும் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

what will Rs.1 lakh investment fetch in 30 years? is it enough to build a house?

what will Rs.1 lakh investment fetch in 30 years? is it enough to build a house?/ரூ.1 லட்சம் முதலீடு.. 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.. வீடு கட்ட போதுமானதா?

Story first published: Wednesday, March 23, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.