காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாயன்று ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, விவேக் தங்கா ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
இருப்புக்கே நெருக்கடியை எதிர்கொள்ளும் கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்ட ஜி23 குழு தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது அவரிடம், கட்சி விவகாரங்களை வழிநடத்த ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்றும், அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய கூட்டுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இதுதவிர, ஜி 23 இன் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் பெற்றதற்காக, அவரை செல்போனில் தொடர்பு கொண்டு சோனியா வாழ்த்துகளை தெரிவித்தார். இருவரும் கடந்த வாரம் நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ராகுல் காந்தி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்து கலந்துரையாடினார்.சோனியா ஜி23 தலைவர்களை சந்திக்கும் முயற்சிகள், கட்சியின் நடவடிக்கைகள் அவரை கைவிட்டு போகாமல் இருக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
கிடைத்த தகவலின்படி, கட்சியில் நிலவும் அதிருப்தியை சரிசெய்திட G23 தலைவர்களில் சிலருக்கு நிறுவனப் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கட்சிக்கு புதிய தலைவரை ஆக்ஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்க வாய்ப்பியிருப்பதாகவும், தற்போதைக்கு கட்சி தலைமையை மாற்றும் எண்ணம் இல்லை எனவும் கூறியதாக தெரிகிறது. தற்சமயம், கட்சியில் சிறிய அளவில் மாற்றம் ஏற்படலாம் என தெரிகிறது.
கடந்த வாரம், ஜி23 தலைவர்கள் அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என வலியுறுத்துகின்றனர்
சோனியா தலைவர்களின் ஆலோசனைக்கு சாதகமாக பதிலளித்ததாகவும், சவால்களை எதிர்கொள்ள கட்சி செயல்படும் விதத்தில் மாற்றம் தேவை என ஒப்புக்கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தலைவர் சோனியாவிடம், தற்போது கட்சி செயல்படும் விதத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. கட்சி அணுகுமுறையில் புதுமை அவசியம் என வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
வரும் நாள்களில் மேலும் பல ஜி23 தலைவர்களை சோனியா சந்திக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு சில தலைவர்கள், ராகுல் காந்தியை பாதுகாப்பு சோனியா முயற்சிப்பதாக தெரிவிக்கின்றனர்.