மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 28 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன. ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் போருக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகில் ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து என்று டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள எச்சரிக்கை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
விளாடிமிர் புடின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அணுகுண்டை பயன்படுத்துவதை, ரஷ்யா விரும்பவில்லை என்றும், இருப்பினும் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார். நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என்ரால் மட்டுமே அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என ஒரு நேர்காணலில், பெஸ்கோவ் பதிலளித்தார்.
மேலும் படிக்க | துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்
CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ரஷ்யா பரிசீலித்து வருகிறது என்பதை மறுத்தார். உக்ரைனில் ரஷ்யா தனது இராணுவ இலக்குகள் எதையும் இன்னும் அடையவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று மறுத்தார்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாகக் கருதும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என கூறியிருந்தார். எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் என ரஷ்ய ஜனாதிபதி தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் பிப்ரவரி 24 அன்று தொடங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தொடக்கியதை அடுத்து, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 28 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ் தவிர, கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?