19 வருடத்திற்கு பின் முதல் ஐரோப்பிய தொழிற்சாலையை துவங்கிய டெஸ்லா.. டான்ஸ் ஆடிய எலான் மஸ்க்..!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது உற்பத்தி தான். சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும், போதிய கார்களை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தாலும் உரிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாத காரணத்தாலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பிற நிறுவனங்களுக்கு இழந்து வருகிறது.

இதைச் சமாளிக்கவே டெஸ்லா 19 வருடத்திற்குப் பின் ஐரோப்பியாவில் முதல் தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.

சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவில் ஜிகாபேக்ட்ரியை உருவாக்கிய நிலையில், ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் இன்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் டெஸ்லாவுக்குப் போட்டியாக எலர்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களுக்கும் தலைவலி உருவாகியுள்ளது.

4வது ஜிகாபேக்ட்ரி

4வது ஜிகாபேக்ட்ரி

பல வருடங்களாகத் திட்டமிடப்பட்டு, கொரோனாவால் தடை பெற்று நீண்ட காலத் தாமதத்திற்குப் பின் செவ்வாய்க்கிழமை டெஸ்லா தனது 4வது ஜிகாபேக்ட்ரியை திறந்துள்ளது. துவக்க விழாவில் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஷாங்காங் தொழிற்சாலை திறப்பு விழாவில் டான்ஸ் ஆடியதை போலவே பெர்லின் தொழிற்சாலையின் திறப்பு விழாவிலும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார்.

ஓலாஃப் ஸ்கோல்ஸ்
 

ஓலாஃப் ஸ்கோல்ஸ்

மேலும் துவக்க நாளிலேயே தொழிற்சாலை வளாகத்தில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முன்னிலையில் 30 வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா Y கார் டெலி வரி செய்யப்பட்டது. இதன் மூலம் டெஸ்லா பங்குகள் நேற்றை வர்த்தக முடிவில் 8 சதவீதம் வரையில் உயர்ந்து 993.98 டாலராக உயர்ந்து டெஸ்லா நிறுவனம் மீண்டும் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றது.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை

2019ல் சுமார் 5.5 பில்லியன் டாலர் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்தப் புதிய தொழிற்சாலை, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள இந்த வேளையில் திறக்கப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. மேலும் டெஸ்லா-வின் வருகை ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது

வோக்ஸ்வாகன் நிறுவனம்

வோக்ஸ்வாகன் நிறுவனம்

மேலும் ஐரோப்பிய நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதால் ஐரோப்பிய சந்தையில் டெஸ்லாவுக்கும் போட்டி அதிகரிக்கும். ஏற்கனவே வோக்ஸ்வாகன் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியது மட்டும் அல்லாமல் விற்பனையும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk Opens Tesla’s First European Factory after 19 years, Musk dance video crazy on internet

Elon Musk Opens Tesla’s First European Factory after 19 years, Musk dance video crazy on internet 19 வருடத்திற்குப் பின் முதல் ஐரோப்பிய தொழிற்சாலையைத் துவங்கிய டெஸ்லா.. முதல் நாளே அசத்தல்..!

Story first published: Wednesday, March 23, 2022, 10:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.