திறந்த வேகத்தில் மூடப்படும் பள்ளிகள் – அரசு அதிரடி உத்தரவு!

பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை திறக்க வழங்கிய அனுமதியை சில மணி நேரங்களிலேயே அரசு திரும்பப் பெற்றுள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை
தாலிபான்
அமைப்பினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள்
ஆப்கன்
அரசுக்கு தடை விதித்துள்ளன.

இதற்கிடையே தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது; தனியாக வெளியே நடமாடக்கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவிகள், ஆசிரியைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தாலிபான்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.

ரஷ்யாவை அழிக்க நினைத்தால்.. அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்.. கிரம்ளின் அறிவிப்பு

அதன்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 7 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி வகுப்பறைகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 8 ஆம் வகுப்பு முதல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வகுப்புகளுக்கு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, மார்ச் 23 ஆம் தேதி (இன்று) முதல் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தாலிபான்கள் அறிவித்திருந்தனர். இதை அடுத்து பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

ஏப்ரல் 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதை மூட தாலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.