அணு ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தில் ரஷ்யா இல்லை. ஆனால் ரஷ்யாவை அழிக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டால் கண்டிப்பாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று
கிரம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் போர்
தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. ரஷ்யா தனது தாக்குதலை குறைப்பதாக இல்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உச்சகட்ட ஆயத்த நிலையில் வைக்குமாறு பிப்ரவரி 28ம் தேதி தனது படையினருக்கு அதிபர் புடின் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் போரில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறதா என்ற பதட்டம் ஏற்பட்டது.
புடின் வில்லங்கமானவர், சொன்னதைச் செய்வார், பல நேரங்களில் சொல்லாததையும் செய்வார் என்பதால் அமெரிக்காவும் ஒரு அளவுக்கு மேல் இந்தப் போரில் தலையிடாமல் ஒதுங்கி விட்டது. இதனால் உக்ரைன் தன்னுடைய பலத்தை கொண்டே ரஷ்யாவுடன் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் என்ன செய்வது என்று தெரியாமல் முடிந்த உதவிகளை மட்டுமே செய்து வருகின்றன.
“ஹைபர்சானிக்”கை கையில் எடுத்த ரஷ்யா.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. புடின் செம கேம்!
இந்த நிலையில், கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அணு ஆயுத பயன்பாடு தொடர்பாக அவர் விவரித்துள்ளார். டிமிட்ரி கூறுகையில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டத்தில் இல்லை. அதேசமயம், ரஷ்யாவின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பட்சத்தில், ரஷ்யாவை ஒன்றுமில்லாமல் செய்ய திட்டம் தீட்டப்பட்டால், அத்தகைய மிரட்டல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.
எங்களது எங்களது நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். மக்களின் பாதுகாப்பு முக்கியம். இதைக் காக்க நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். என்ன வேண்டுமானாலும் என்றால் அதற்கான அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நாட்டின் இருப்பே கேள்விக்குறியாக்கப்படும் நிலை வந்தால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அதில் மாற்றமே இல்லை என்றார் பெஸ்கோவ்.
பேசாம “அதை” அனுப்பி வைங்க.. புடின் சரிப்பட்டு வருவார்.. டிரம்ப் “திகில்” ஐடியா!
பெஸ்கோவ் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்றே தெரிகிறது. இதனால்தான் அமெரிக்கா தனது ஆவேசத்தையும் வேகத்தையும் குறைத்துக் கொண்டு பம்மிக் கிடக்கிறது என்றும் ஊகிக்க முடிகிறது. காரணம், அமெரிக்காவுக்கு நிகராக ரஷ்யாவும் ஆயுதங்களை குறிப்பாக அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளது. எடுத்து வீச ஆரம்பித்தால் அமெரிக்காவின் இருப்பும் கூட கேள்விக்குறியாகி விடும். உலக அளவில் மிகப் பெரிய பிரளயமாக இந்த போர் மாறி விடும் என்பதால்தான் அமெரிக்கா கம்மென்று இருக்கிறது.
அதேசமயம், ரஷ்யாவின் மனதில் அணு ஆயுத பயன்பாடு குறித்த எண்ணம் இருப்பதே முதலில் அபாயகரமானது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு பொறுப்பான அணு சக்தி நாடு இப்படிப் பேசுவதே தவறானது, அபாயகரமானது. அவர்கள் மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும். அமெரிக்கா தனது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். ரஷ்யாவின் போக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
6 மாடி.. ஒரு ஸ்விம்மிங் பூல்.. சூப்பரான ஸ்பா.. காத்திருக்கும் கப்பல்.. புதிரான புடின்!
உலக அளவில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கான ஆதரவு குறைவாகவே உள்ளது. இருப்பினும் ரஷ்யா தனது தாக்குதலை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் ஆலோசனையையும் அது பரிசீலிக்கவே இல்லை. தொடர்ந்து அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதங்களை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு புடின் உத்தரவிட்டாலும் கூட, ரஷ்யத் தரப்பில் அப்படியான எந்த நடவடிக்கையும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் அமெரிக்காவை மிரட்டவே புடின் அப்படி சொல்லியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ அதி நவீன போர் விமானங்களைக் கொடுத்தால் போரின் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா நேரடியான போரில் குதிக்கலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆக மொத்தம்.. இந்த “பேய் சண்டை” என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.