எதிர்வரும் நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது

மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய மூன்று கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் இருப்பதாகவும் அதில் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல்கள் இறக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்இ எதிர்வரும் நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதுமான அளவு எரிபொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன. முன்னைய நாட்களுடன் ஒப்பிடும்போது தற்போது எரிபொருள் நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள் குறைந்துள்ளதாக கண்காணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், இன்றைய தினம் அதிகமான டீசல்களை விநியோகிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது நாட்டில், 8500 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான எரிபொருட்கள் நாளாந்தம் பயன்படுத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காமினி லெக்குகே தெரிவித்துள்ளார்.

 ஆனால், இது போதுமான அளவில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று அல்லது நாளை துறைமுகத்தை வந்தடையவிருக்கின்றது. போதியளவிலான மண்ணெண்ணெயை விநியோகிக்குமாறு தாம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.