ரணிலின் கேள்வியால் திணறிய பசில்


சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வியால் நிதியமைச்சர் தடுமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் பதில் அளிக்கையிலேயே பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்க முடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிட முடியும் என்று பசில் ராஜபக்ச பதில் அளித்துள்ளார்.

பசிலின் தடுமாற்றமாக பதிலின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.