Aishwarya:ஐஸ்வர்யாவுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்: இது லிஸ்ட்டுலயே இல்லயே

ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
பாலிவுட்
செல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மீனு அரோரா தயாரிக்கும் ஓ சாத்தி சல் படத்தை தான் ஐஸ்வர்யா இயக்கவிருக்கிறார்.

அது குறித்து ஐஸ்வர்யா ட்வீட் செய்தார். இந்நிலையில் அவர் கைவசம் இன்னொரு பாலிவுட் படம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆத்தா, என் புது காதல் ‘சக்சஸ்’ ஆயிடுச்சு:துள்ளிக் குதிக்கும் ஐஸ்வர்யா
முசாபிர் வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோராவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து பாலிவுட் படம் பண்ணுகிறார்களாம். அந்த படம் பெரிய அளவில் உருவாகவிருக்கிறது. கலைஞர்களின் தேர்வு உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகிறது.

அந்த படம் அவரின் முதல் பாலிவுட் படமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பல படங்களை இயக்கவிருக்கிறார் என்று ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிரேர்னாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

ஐஸ்வர்யா மேடம் மற்றும் நான் சேரும் படத்தில் பெரிய சர்பிரைஸ் இருக்கிறது என்றார்.

முதல் பட வேலையே துவங்காத நிலையில் ஐஸ்வர்யா கைவசம் இன்னொரு படம் இருக்கிறது. பிரேர்னாவுடன் சேர்ந்து பண்ணும் படம் குறித்து ஐஸ்வர்யா ஏன் அமைதியாக இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.