மொத்தம் 30 குதிரைகள்.. உயிரோடு கொளுத்திய ரஷ்யப் படையினர்.. உக்ரைனில் "ஷாக்"!

உக்ரைனின்
ஹாஸ்டமெல்
என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்யப் படையினர் அதை தீவைத்துக் கொளுத்தி விட்டனர். இதில் அந்த லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் பரிதாபமாக தீயில் கருகி இறந்து விட்டன. மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன.

கீவ் நகருக்கு வடக்கே இந்த ஹாஸ்டமெல் நகரம் உள்ளது. இங்கு புகுந்த ரஷ்யப் படையினர் அங்கிருந்த குதிரை லாயத்தை தீவைத்துக் கொளுத்தினர். இதில் லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் தீயில் கருகி உயிரிழந்து விட்டன. 2 குதிரைகள் மட்டும் உயிர் பிழைத்து தப்பி ஓடின.

இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில் போர் தொடங்கியதுமே எனது வீடு மற்றும் லாயத்தை ரஷ்யப் படையினர் ஆக்கிரமித்து விட்டனர். என்னை வீட்டை விட்டு போகுமாறும் மிரட்டினர். போகாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்தனர். இந்த நிலையில் லாயத்துக்கு தீவைத்து குதிரைகளைக் கொன்றுள்ளனர். பெரும்பாலான குதிரைகளுக்கு 7 முதல் 10 வயது இருக்கும் என்றார் அலெக்சான்ட்ரா.

2 நாய்களும்.. 27 வயசு மரியாவும்.. அவ்வளவு பெரிய குண்டு போட்டும்.. அசர வைக்கும் ஸ்டோரி!

ரஷ்ய வீரர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் க ண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கீவ் நகருக்கு அருகில் உள்ள புறநகரான மகரிவ் நகரில் புகுந்த ரஷ்யப் படையினரை, உக்ரைன் படையினர் திரும்பிப் போக வைத்துள்ளனர். அந்தப் பகுதியின் முக்கியச் சாலையை உக்ரைன் படையினர் கைப்பற்றி விட்டனர். இதனால் ரஷ்யப் படையினர் மேற்கொண்டு உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், கீவ் நகரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்யப் படையினர் தற்போது புச்சா, ஹாஸ்டமெல், இர்பின் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் கொண்டு வந்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.