பள்ளி சீருடையுடன் காணாமல் போன 16 வயது கனேடிய மாணவி! பொலிசார் முக்கிய தகவல்


கனடாவில் காணாமல் போன 16 வயதான பள்ளி மாணவியை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

சமந்தா வால்டிஸ் ஆல்வரிஸ் என்ற 16 வயது சிறுமியின் பாதுகாப்பு குறித்து ரொறன்ரோ பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.

அவர் கடைசியாக பள்ளி சீருடையுடன் கடந்த 15ஆம் திகதி காலை 8.30 மணியளவில் காணப்பட்டுள்ளார்.
110 முதல் 155 பவுண்டுகள் வரை உடல் எடை கொண்டவராக சமந்தா இருப்பார் எனவும் மெல்லிய உடலமைப்பு கொண்டவர் அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட, கறுப்பு முடியுடன், ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் கொண்டவர் சமந்தா என பொலிசார் கூறியுள்ளனர்.

அவரின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையும் பொலிசார் கொண்டுள்ள நிலையில் யாருக்கேனும் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.