மளிகை பொருட்களின் கடும் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்படும் மக்கள்.!

மளிகை பொருட்களின் விலை மலை போல் உயர்ந்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சீசனில் நாடு முழுவதும் அதிக மழை பெய்ததால் மளிகை பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குறைவாக உற்பத்தி ஆன உணவுப் பொருட்களின் விலையும் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. கடும் மழை காரணமாக பருப்பு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அவற்றின் விலை தற்போதே உயர்ந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு கிலோ பாசிபருப்பின் விலை தற்போது கிலோ ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ரூ.93-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அனைத்து மளிகை பொருட்கள் விலையும் அடுத்த மாதம் முதல் கடுமையாக உயர பாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உளுத்தம்பருப்பு கிலோ ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆக உயரவும், வெள்ளை கொண்டை கடலை ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆகவும், மிளகாய் ரூ.200-ல் இருந்து ரூ.240 ஆகவும், குண்டுமிளகாய் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

கடுகு ரூ.77-ல் இருந்து ரூ.80 ஆகவும், சீரகம் ரூ.230-ல் இருந்து ரூ.250 ஆகவும், மிளகு ரூ.535-ல் இருந்து ரூ.540 ஆகவும் விலை உயருகிறது. புளி ரூ.80-ல் இருந்து ரூ.150 ஆகவும், ஏலக்காய் ரூ.1150-ல் இருந்து ரூ.1200 ஆகவும் விலை உயரும் அபாயம் காணப்படுகிறது.

இதுதவிர சோம்பு, பட்டை, லவங்கம், தனியா போன்ற மளிகை பொருட்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயரவும், சோப்பு விலையும் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே பிஸ்கட், நூடுல்ஸ், டீத்தூள் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.