சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் தான்..!

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தங்க முதலீட்டாளர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கத்தின் விலையினை தொடந்து கடந்த சில அமர்வுகளாக அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இது 1950 – 1890 என்ற லெவலிலேயே காணப்படுகின்றது.ஆக இனி எப்படி இருக்கும். கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

என்ன தான் நடக்கிறது.. ஏற்ற இறக்கத்தில் சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?]

மோசமான நிலை

உக்ரைனின் மரியுபோலில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் மின்சாரம், உணவு, நீர் இன்றி மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை அதிகரித்துள்ளது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், அது இதுவரையில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இன்று வரையிலும் பிரச்சனையானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. ஆக இதுவும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

பணவீக்கம் Vs தங்கம் Vs கச்சா எண்ணெய்
 

பணவீக்கம் Vs தங்கம் Vs கச்சா எண்ணெய்

தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கமானது மீண்டும் உச்சம் தொடலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் அதிகரித்தாலும், அது பெரியளவிலான விலை ஏற்றத்தினை தடுத்துள்ளது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது மேற்கொண்டு வலுவடைந்து வருகின்றது. இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன. இந்த பத்திர சந்தையானது மே 2019க்கு பிறகு தற்போது புதிய உச்சத்தினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மானிட்டரி கொள்கை கடுமையாக்கப்படும்

மானிட்டரி கொள்கை கடுமையாக்கப்படும்

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மத்திய வங்கியானது மானிட்டரி கொள்கைகளை தொடர்ந்து கடுமையாகும் என கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா மட்டும் அல்ல, மற்ற முன்னணி பொருளாதார நாடுகளும் அமெரிக்காவினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமான நிலையானது, தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றத்தினை காண வழிவகுக்கலாம். அதோடு வட்டி விகிதம் அதிகரித்தாலும், பணவீக்கம் என்பது தொடர்ந்து தற்போதைய நிலையில் பெரியளவில் குறையுமா? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக நடுத்தர காலத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில், என அனைத்தும் தங்கம் விலை சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால் நோக்கிலும் சற்று குறைந்த பின்னர் வாங்கினால் அது லாபகரமானதாக இருக்கலாம். மொத்தத்தில் தங்கத்தினை தற்போதைக்கு பொறுத்திருந்து வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து, 1920.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.902 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 51,344 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச,குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 169 ரூபாய் குறைந்து, 67,535 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமின்றி கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 47 ரூபாய் குறைந்து, 4781 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 376 ரூபாய் குறைந்து, 38,248 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, 5216 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து,41,728 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.50 பைசா குறைந்து, 71.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 719 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1500 ரூபாய் குறைந்து, 71,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று சற்று சரிவிலேயே உள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 23rd 2022: gold price falls on higher bond yields

gold price on march 23rd 2022: gold price falls on higher bond yields/சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.