மின்னல் வேகத்தில் சார்ஜிங் – மோட்டோ வெளியிட்ட 125W சார்ஜர்; 194MP கேமரா!

கடந்தாண்டு டிசம்பர் மாதம் புதிய Flagship ஸ்மார்ட்போனை முதல் Snapdragon 8 Gen 1 சிப்செட் கொண்டு மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு பிராண்டுகளில் மோட்டோ தான் முதன் முதலில் இந்த சக்திவாய்ந்த புராசஸர் கொண்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டது. பின் நாள்களில் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில்
Motorola
Edge 30 Pro என விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

லெனோவா நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் மோட்டோரோலா, தற்போது புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து பல தகவல்கள் கசிந்து வந்த நிலையில், வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயர் ‘
Motorola Frontier
‘ ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இது தான் மோட்டோ பயனர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

அதில், 125W அதிவேக சார்ஜர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் புதிய Motorola Frontier ஸ்மார்ட்போனுடன் வெளியாகும் என டெக் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 125W சார்ஜருடன் வரும் முதல் மோட்டோ போன் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

OnePlus வெளியிடப்போகும் 6 ஸ்மார்ட்போன்கள் – கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்!

Motorola Frontier சிறப்பம்சங்கள்

கிடைத்த தகவல்களின்படி, இந்த சார்ஜரின் எடை 130 கிராம் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சார்ஜர் மோட்டோரோலா ஃபிரண்டியர் ஸ்மார்ட்போனுடன் ஜூலை மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மோட்டோரோலா ஃபிரண்டியர் குறித்து வெளியான தகவல்களின்படி, ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் கொண்ட Curved டிஸ்ப்ளே ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 6.73″ இன்ச் P-OLED FHD+ திரை இருக்கலாம் என தகவல்கள் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை பெறும் எனக் கூறப்படுகிறது.

அல்ட்ரா பாஸ்ட் போன்

செயல்திறனுக்காக புதிய
Snapdragon 8 Gen 1 Plus
சிப்செட் இதில் நிறுவப்படலாம். மேலும், 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Android 12
இயங்குதளம் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருக்கும்.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போனை 4,500mAh திறன் கொண்ட பேட்டரி சக்தியூட்டலாம். இந்த பேட்டரியை ஊக்குவிக்க 125W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும். கூடுதலாக, 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல் ஆண்ட்ராய்டு போனுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

பக்கா கேமரா

பெரிய 60 மெகாபிக்சல் செல்பி கேமரா பயனர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் பின்புற கேமரா அமைப்பில் OIS வசதியுடன் மிகப்பெரிய 194 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் பவர் பேக்டு அம்சங்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், டெக் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து Moto அறிவிப்பை வெளியிடும் என பயனர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Read more:
Google I/O நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட சுந்தர் பிச்சை!வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!Nothing Event: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா ‘Naked’ பிராண்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.