சிம்பு அப்பாவின் கார் மோதி ஒருவர் பரிதாப உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி ஒருவர் நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, வசனம், இசை என பன்முக திறமை கொண்டவர்
டி. ராஜேந்தர்
. இவர் குடும்பத்துடன் காரில் சென்ற போது, சென்னை, தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளியான ஒருவர் கடந்த மார்ச் 18-ம்தேதி சாலையை கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளன முனிசாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியின் மூலம் ராஜூவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மீண்டும் தள்ளிப் போகும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள தி.நகர் போலீசார் டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் – நடிகர் விஷால் பேச்சு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.