இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், அதன் இடைகால டிவிடெண்ட் பற்றிய முக்கிய முடிவினை இந்த வாரத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் குறித்து பரிசீலிக்க. இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு இந்த வார இறுதியில் கூடவுள்ளது.
இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!
முன்னதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் மார்ச் 25 அன்று இயக்குனர்கள் குழு கூட்டம் கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

2வது முறை டிவிடெண்ட்
2021 – 2022,ம் நிதியாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த நிறுவனம் இந்த பரீசிலனையை செய்யவுள்ளது. முன்னதாக ஜனவரியில் இந்த நிறுவனத்தின் வாரியம், இடைக்கால டிவிடெண்டாக 1 ரூபாய் அறிவித்தது. இது பிப்ரவரி 5, 2022 அன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்கு நிலவரம் என்ன?
விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் சற்று அதிகரித்து, 611.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 615 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 607.70 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இயில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 611.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 614.75 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 607.70 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 398 ரூபாயாகும்.

பங்கு சந்தை நிலவரம்?
இதே பங்கு சந்தை குறியீடுகளை பொறுத்தவரையில் இன்று காலை தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், முடிவில் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ்304.48 புள்ளிகள் குறைந்து, 57,684 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.85 புள்ளிகள் குறைந்து, 17,245 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

வளர்ச்சி விகிதம்
ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ள நிலையில், அதன் எதிரொலி பங்கு சந்தையிலும் இருந்து வருகின்றது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் அதன் பங்கினை பைபேக் செய்வதாக அறிவித்தது. இதற்கிடையில் நோமுரா ஆய்வு நிறுவனம் இந்திய ஐடி துறைக்கு பாசிட்டிவ் கமாண்டினை பதிவு செய்துள்ளன. வளர்ச்சி விகிதம் 1.5 மடங்கு இருக்கலாம் எனவும் கூறியுள்ளது. இதற்கிடையில் விப்ரோ, இன்ஃபோசிஸ் பங்குகள் நீண்டகால நோக்கில் நல்ல வளர்ச்சி காணலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
wipro may consider interim dividend on march 25
wipro may consider interim dividend on march 25/விப்ரோ பங்கினை வாங்கியிருக்கீங்களா.. சர்பிரைஸ் காத்திருக்கு..!