பலவருட பகையை மறந்த அஜித்.. மீண்டும் அஜித்துடன் இணையும் அந்த நடிகர்..!

நடிகர்
அஜித்
படங்களை ரசிகர்கள் என்னதான் சிலர் விமர்சனம் செய்தாலும் அவருக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. பல கஷ்டங்களை தாண்டி இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் அஜித்தை அனைவரும் ரோல் மாடலாக பார்க்கின்றனர்.

இருப்பினும் சில ரசிகர்கள் அவர் படங்களின் மேல் கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் அவர்மீது எந்த ஒரு கடுமையான விமர்சனங்களையும் வைக்கமாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா துறையை சார்ந்தவர்கள் மத்தியிலும் அஜித்திற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு.

தனுஷும் அவரும் சேராததற்கு சிம்பு தான் காரணமா ?

இந்நிலையில் நடிகர் அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் சில கருத்து மோதல் இருந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. யாரிடமும் பிரச்சனைக்கு போகாத அஜித்திடம் அப்படி வடிவேலுவுக்கு என்னதான் பிரச்சனை என அனைவரும் கேட்டு வந்தனர்.

ஆரம்ப காலகட்டத்தில் அஜித் மற்றும்
வடிவேலு
பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருப்பினும் இவர்கள்
ராஜா
என்ற படத்தில் இணைந்து நடிக்கும்போது சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் பின் இருவரும் இணைந்து எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தற்போது அஜித்தின் 63 ஆவது படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அஜித் தற்போது தன் 61 ஆவது படவேலைகளில் பிஸியாக உள்ளார். அதன் பின்
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் நடிக்கயிருக்கின்றார். இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு அஜித் மீண்டும் தன் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இந்த படத்தில் தான் அஜித்துடன் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளாராம். பழைய பகையை மறந்து மீண்டும் 20 வருடங்கள் கழித்து அஜித் மற்றும் வடிவேலு இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.