Amazon இந்தியாவை குஷிப்படுத்த வந்த Redmi நோட் 11 ப்ரோ போன்!

Xiaomi
தனது
ரெட்மி
தொகுப்பு ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய சீரிஸை சமீபத்தில் சேர்த்தது. புதுவரவான ரெட்மி நோட் 11 சீரிஸ் (Redmi Note 11 Series) ஸ்மார்ட்போன்களில்,
Redmi Note 11 Pro
ஸ்மார்ட்போன் Amazon ஷாப்பிங் தளத்தில் இன்று (23 மார்ச்) விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், 108 மெகாபிக்சல் கொண்ட முதன்மை சென்சார், 5000mAh பேட்டரி, 67W டர்போ சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களுடன் இருக்கிறது. நடுத்தர விலையில் களம் காணும் இந்த ஸ்மார்ட்போன், தனது பெரிய மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டு போட்டியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ சிறப்பம்சங்கள் (redmi note 11 pro specifications)

புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.67″ FHD+ அமோலெட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை இந்த டிஸ்ப்ளே பெற்றுள்ளது. Corning Gorilla Glass பாதுகாப்பும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் புதிய
Mediatek helio
G96 புராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. ARM Mali-G57 MC2 கிராபிக்ஸ் எஞ்சினாக செயல்படுகிறது.
Android 11
பதிப்பில் இயங்கும்
MIUI 13
ஸ்கின் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ கேமரா (redmi note 11 pro camera)

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை, 108 Megapixel முதன்மை கேமரா உடன் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகாபிக்சல் ஆம்னி விஷன் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய 4 கேமராக்களும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பொழுதுபோக்கிற்கு வழிவகுக்கிறது. யூஎஸ்பி டைப் சி, வைஃபை6, ப்ளூடூத் 5.1 ஆகிய இணைப்பு ஆதரவுகளும் உள்ளன.

மின்னல் வேகத்தில் சார்ஜிங் – மோட்டோ வெளியிட்ட 125W சார்ஜர்; 194MP கேமரா!

ரெட்மி நோட் 11 ப்ரோ பேட்டரி (redmi note 11 pro Battery)

ஜியோமேக்னெடிக் சென்சார் (Geomagnetic sensor), லைட் சென்சார் (Light sensor), புராஸிமிட்டி சென்சார் (Proximity sensor), அக்செலெரோமீட்டர் (Accelerometer), கிராவிட்டி சென்சார் (Gravity sensor) ஆகிய சென்சார்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி நிறுவப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 67W டர்போ சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி 67W பாஸ்ட் சார்ஜிங் அடாப்டரையும் வழங்குவது கூடுதல் சிறப்பாகும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ விலை (redmi note 11 pro price)

Stealth Black, Phantom White, Star Blue ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் 6GB + 128GB வேரியண்டின் விலை ரூ.17,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ.19,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!

Amazon India, Mi India, Mi Store ஆகிய இடத்தில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஆன்லைனில் வங்கி கடன் அட்டைகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது. சியோமி இந்தியா தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.15,500 வரை Exchange Value கொடுக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.