மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக.!

மதுரையில் மார்ச் 29-ல் தமிழக அரசின் நெல்கொள்முதல் முறைகேட்டை  கண்டித்து நெல்மூட்டைகளுடன் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து பாஜக தரப்பில் இருந்து வந்த அறிவிப்பில், “கடந்த 21.03.2022-ம் தேதியில் மதுரை புறநகர் போடிநாயக்கன்பட்டி, கட்டன்குளம், வடுகப்பட்டி, நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு பாஜக விவசாய அணி சார்பில் நெல்கொள்முதல் நிலையங்களுக்குச்  சென்று பார்வையிட்டபொழுது, இலட்சக்கணக்கான மூட்டைகள் நெல்கொள்முதல் செய்யப்படாமலும், திறந்த வெளியிலும், நீர்நிலைப் பகுதிகளிலும் கொட்டிக்கிடப்பதைக்  காண முடிந்தது.

அங்கு காவல்காத்த  விவசாயிகள் ஒரு மூட்டைக்கு(40கிலோ) ரூ.60 இலஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

நெல்கொள்முதல் நிலையங்கள் முழுமையாகவே திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை பணம்பட்டுவாடா செய்யப்படவில்லை. முப்பது நாட்களுக்கு மேலாகியும் நெல்லையும் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றார்கள்.

இந்த கொள்முதல் நிர்வாகச்சீர்கேடு தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை, திருச்சி, தேனீ, திருவாரூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து பலமுறை மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியும் எவ்விதப் பயனுமில்லை.

எனவே, ஆறு மாவட்ட விவசாயிகளை ஒன்றுதிரட்டி, மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் மதுரையில் வரும் 29-ம் தேதி மதுரை பழங்காநத்தம் பகுதி, நடராஜா தியேட்டர் அருகில் மாட்டுவண்டு நெல்மூட்டைகளுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுக்குறித்து, மதுரை மாநகரில்  நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பாஜக விவசாய அணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் Dr.சரவணன், சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ திரு.மாணிக்கம், விவசாய அணி மாவட்ட தலைவர்  முத்துப்பாண்டி, விவசாய அணி மாநில துணைதலைவர் மணி முத்தையா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

மதுரை மாநகரில்  நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் Dr.சரவணன்,சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, விவசாய அணி மாநில துணைதலைவர் மணி முத்தையா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.