இழந்த பகுதிகளை மீட்க போராடும் உக்ரைன்! ரஷ்ய படையெடுப்பின் சமீபத்திய தகவல்கள்




Courtesy: BBCNewsTamil

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தற்போதை நிலவரம் குறித்த சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்ய படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து இன்று 28-வது நாளாக போர் நடந்துவருகிறது.

இந்நிலையில், இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க உக்ரைன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவின் மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான மகாரீவ் பகுதியில் மீண்டும் உக்ரைனின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யப்படைகள் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்திவருகிறது.

தனக்கு நெருக்கமானவர்களை சந்தேகிக்கத் துவங்கியுள்ள புடின்: அடிக்கடி கோப்படுகிறாராம் 

.

மரியுபோல் நகர மக்கள்தொகையில் கால்வாசி மக்கள் அல்லது சுமார் 1,00,000 பேர் “மனிதநேயமற்ற சூழல்களில்” இன்னும் சிக்கியுள்ளதாக, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

PC: Reuters

மரியுபோலில் மனிதநேய வழித்தடமும் ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டதாகவும், உக்ரைன் அவசரசேவை பணியாளர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் சிறைக்கைதிகளாக பிணை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் இண்டர்நேஷனல் ஊடகத்திடம் பேசுகையில், ரஷ்யாவின் “இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால்” அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்யாவின் கருத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.