ரஷ்யாவுக்கு தற்காலிகமாக விமான சேவையை நிறுத்துவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ஷ்யாவிற்கு வரும் 25-ம் தேதி முதல் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு விமானங்களை இயக்குவதற்கான வழிமுறைகள், தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவைகளை அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய நட்புறவுகளை கொண்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை வியட்நாம், ரஷ்யாவிற்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

வியட்நாமில் இருந்து ரஷ்யாவுக்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே விமானங்களை இயக்கி வரும் சூழலில் மறு அறிவிப்பு வரும் வரை சேவைகளை நிறுத்திவைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.