நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை விரைவில் மணக்கோலத்தில் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
நயன்தாரா
, விக்கியின் திருமண செய்தி விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
நயன்தாராவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,
நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் தற்போதைக்கு
திருமணம்
செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. நயன்தாராவுக்கு திருமணம் என்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை தகவல் வெளியாவதால் அதை கேட்டு சிரிக்கலாம்.
அவர்களுக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்றார்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. திருமணம் நடக்கும்போது சொல்கிறோம் என்றார்
விக்னேஷ் சிவன்
. இந்நிலையில் தற்போதைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
நயன்தாராவை விரைவில் திருமதியாக பார்க்கப் போகிறோம் என்கிற ஆசையில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைவியை கல்யாணம் பண்ணும் நினைப்பே இல்லையா என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆத்தா, என் புது காதல் ‘சக்சஸ்’ ஆயிடுச்சு:துள்ளிக் குதிக்கும் ஐஸ்வர்யா