அண்மையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன் உதவிக்காக இந்தியப் பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் நிதி அமைச்சர் பெருந் தொகை நிதியினை கடனாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.