லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் குளோரின் கசிவு: 29 பேர் மருத்துவமனையில் அனுமதி


லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பயன்படுத்தப்பட்ட Queen Elizabeth ஒலிம்பிக் பூங்காவின் Aquatics Centre-ல் இன்று (23 மார்ச்) அதிக அளவு குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

அதன் விளைவாக 25-க்கும் மேற்பட்டோர் மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக லண்டனின் அவசரச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவின் நீர்வாழ் மையத்திலிருந்து சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று லண்டன் தீயணைப்புப் படை கூறியது.

“ஒரு இரசாயன எதிர்வினை காரணமாக அதிக அளவு குளோரின் வாயு வெளியிடப்பட்டது,” என்று லண்டன் தீயணைப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னர், சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுமாறு தீயணைப்புப் படை கேட்டுக்கொண்டது. மேலும், சம்பவ இடத்தில் தடுப்புகள் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

PC: REUTERS/Henry Nicholls

நீச்சல் குளத்திற்கான ரசாயனங்கள் விநியோகம் செய்யப்பட்டபோது வாயுக்கசிவு ஏற்பட்டதாக Aquatics Centre தெரிவித்தது.

லண்டன் ஆம்புலன்ஸ் இது ஒரு பெரிய சம்பவம் என்று விவரித்தது மற்றும் அவர்கள் 13 ஆம்புலன்ஸ் குழுக்களையும், மேலும் பல குழுக்களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பியதாகக் கூறியது.

ஆம்புலன்ஸ்கள் 29 நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன, மேலும் 48 பேர் சம்பவ இடத்தில் மருத்துவ சோதனை செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் சுவசிப்பதில் சிரமத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

PC: REUTERS/Henry Nicholls

PC: REUTERS/Henry Nicholls

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.