வாஷிங்டன் ; ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் நடக்கும், ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகளின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரசல்ஸ் சென்றார்.
ஜோ பைடன் புறப்படுவதற்கு முன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உக்ரைன் போர் தொடர்பாக, வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய, நேட்டோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் பிரசல்சில் நடக்கிறது. இதில், ஜோ பைடன் பங்கேற்றார்.
அப்போது, ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அவர் பேசுவார்.அத்துடன் ஐரோப்பிய நாடுகள், எண்ணெய் இறக்குதியில் ரஷ்யாவை பெரிதும் சார்ந்திராமல் இருக்க, நீண்ட கால திட்டம் குறித்தும் யோசனை தெரிவிப்பார். எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக, ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை ஜோ பைடன்
அறிவிக்க உள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கு அடுத்த கட்ட ராணுவ உதவி அளிப்பது பற்றியும் ஜோ பைடன் ஆலோசனை நடத்துவார்.போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கும், அகதிகளுக்கும் நிவாரண உதவிகள் அளிப்பது குறித்தும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து ஜோ பைடன் போலந்து சென்று, அந்நாட்டின் அதிபர் அன்ட்ரஜ் டுடாவை சந்தித்து பேச உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா நட்பு நாடு
இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்ட, ‘குவாட்’ அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதனால் அமெரிக்காவுக்கு மிக அவசியமான நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. பாதுகாப்பு, ராணுவம் தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே வரலாற்று சிறப்புமிக்க கூட்டுறவு உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் காலத்தில் இருந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா – இந்தியா இடையிலான நல்லுறவு
வலுவடைந்து வருகிறது.நெட் பிரைஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்.
Advertisement