எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு| Dinamalar

புதுடில்லி,:டில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியாவின் பதவிக்காலம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுஉள்ளது.பல மாநிலங்களில், மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் முதன்மை மருத்துவமனையாக கருதப்படும் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த 2017 மார்ச் 28ம் தேதி, டாக்டர் ரந்தீப் குலேரியா, இயக்குனராக பதவி ஏற்றார்.இந்நிலையில், இன்றுடன் முடிய இருந்த அவரின் ஐந்து ஆண்டு பதவிக்காலம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எய்ம்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியாவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த மூன்று மாத காலம் முடியும் வரை அல்லது புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, அவர் இப்பதவியில் நீடிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.