ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை நிராகரித்தது இந்தியா

புதுடெல்லி:
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தின் தொடக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்து கொண்டார். 
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சீன அமைச்சரின் கருத்துகளை இந்தியா நிராகரிப்பதாக தெரிவித்தார். 
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதில்  சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை என்றும் அவர் கூறினார்.  இரண்டு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருப்பதாகவும், அது என்றும் அப்படியே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன வெளியுறவு அமைச்சர் விரையில் இந்தியா வர உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் குறித்த அவரது கருத்தை இந்தியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.